1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (16:53 IST)

கேரள மக்களுக்கு உதவும் நோக்கத்தில் நயன்தாரா!

கேரளா மக்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நயன்தாராவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை உண்டாக்கியது. இதற்கு மலையாள சினிமா நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி செய்தார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் நிவாரண நிதி அளித்துள்ளார்கள்.
 
பருவ மழையால் ஏற்பட்ட சேதம் அதிகம் என்பதால் இன்னும் மக்களுக்கு உதவ மலையாள சினிமா பிரபலங்கள் டிசம்பர் 7 ம் தேதி அபுதாபியில் நட்சத்திர கலைவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் வரும் கலெக்‌ஷன் அந்த மக்களுக்கு தானாம்.
 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், நிவின் பாலி, பிருதிவிராஜ் என பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிற நிலையில், லேடி சூப்பர் நயன்தாராவிற்கு மட்டும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இதில் அவர் கலந்துகொள்வாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.