1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:19 IST)

அடடே சுந்தரா திரைப்படம் தோல்வி அடைய நானேக் காரணம்.. நானி ஓபன் டாக்!

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் அண்டே சுந்தரானிக்கி (அடடே சுந்தரா) என்ற படத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்திருந்தார் நஸ்ரியா.

படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானாதும், தியேட்டரில் கவனம் பெறவில்லை. ஒரு தோல்வி படமாக அமைந்தது. ஆனால் ஓடிடியில் ரிலிஸான போது நல்ல கவனம் பெற்றது. இதையடுத்து அதே இயக்குனர் இயக்கத்தில் இப்போது நானி “சூர்யாவின் சனிக்கிழமை” என்ற பேன் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இதில் பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நானி அளித்த ஒரு நேர்காணலில் “அடடே சுந்தரா திரைப்படம் என்னால்தான் தோல்விப் படமானது. அது ஒரு அழகான ஃபீல்குட் படம். ஆனால் நான் என் ரசிகர்களைக் கணக்கில் கொள்ளாமல் சினிமா மீது கொண்ட காதலால் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்துள்ளது. முன்முடிவுகளோடு வந்த ரசிகர்களை அந்த படம் திருப்திப் படுத்தவில்லை. அந்த தோல்விக்கு முழுக் காரணமும் நான்தான்” எனக் கூறியுள்ளார்.