புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 18 அக்டோபர் 2018 (12:52 IST)

தந்தை மேல் பாலியல் புகார் – நந்திதா தாஸ் பதில் என்ன?

நடிகை நந்திதா தாஸ் தனது தந்தை ஜட்டின் தாஸ் மேல் பாலியல் குற்றச்சாடு எழுப்பப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கே தனது ஆதரவு என தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மி டூ இயக்கம் பெண்கள் மீதான பாலியல் புகார்களை பொது சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. இதில் நம்பவே முடியாத பல இந்தி மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களின் பெயர்கள் சிக்கியுள்ளன. இந்தி சினிமாவின் நடிகர் நானா படேகரில் இருந்து தமிழ் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து வரை இந்த பட்டியல் நீண்டுள்ளது.

இதில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான நந்திதா தாஸின் தந்தை ஓவியர் ஜட்டின் தாஸ் மீது பேப்பர் மேக்கிங் கம்பெனியின் நிறுவனரான இருக்கும் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறினார். இதுவரை அதுபற்றி பேசாதிருந்த நந்திதா தாஸ் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கமே என்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் ‘மி டூ இயக்கத்திற்கு எப்போதும் ஆதரவு தெரிவித்து வருகிறேன். பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான எனது குரலை தொடர்ந்து பதிவு செய்வேன். எனது தந்தைக்கு எதிரான புகாரை அவர் மறுத்துள்ளார்.  நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். இது நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய நேரம். அப்போதுதான் பெண்கள் தைரியமாக பேச முன்வருவார்கள். அதே சமயத்தில் புகார்கள் தவறாக எழுப்பப்பட்டு  இந்த இயக்கத்தை நீர்த்துப் போக செய்து விடக்கூடாது. என்னைப் பல சமயத்தில் தவறான உள்நோக்கம் இல்லாமல் பலர் தொட்டிருக்கிறார்கள். உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்படும். தற்போதைக்கு என்னால் இது சம்மந்தமாக இவ்வளவுதான் கூறமுடியும்.’ என தெரிவித்துள்ளார்.