வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (15:07 IST)

இந்தியில் கால்பதித்த இயக்குனர்… மிஷ்கின் பாராட்டு!

இயக்குனர் நந்தா பெரியசாமி கதையில் உருவான ராஷ்மி ராக்கெட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து தடகள போட்டிகள் வீராங்கனையாக சாதனை பெற்ற ஒரு இளம்பெண்ணின் உண்மை கதையை இயக்குனர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையை திரைப்படமாக பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்காஷ் கருணா முன்வந்துள்ளார். இந்த கதை தற்போது பாலிவுட்டில் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவானது.

கடந்த வாரம் ஓடிடியில் ரிலிஸான இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது. இந்நிலையில் கதாசிரியர் நந்தா பெரியசாமியை பாராட்டும் விதமாக இயக்குனர் மிஷ்கின் ‘இந்தியில் கதாசிரியராக முதல் வெற்றியை பெற்றிருக்கும் நந்தா பெரியசாமிக்கு இதயப்பூர்வமான பாராட்டுகள். அவர் மேலும் பல நல்ல கதைகள் எழுதவும், நல்ல படங்கள் இயக்கவும் வாழ்த்துகள்' எனப் பாராட்டியுள்ளார்.