செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:48 IST)

அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் டாப்ஸியின் அடுத்த படம்!

நடிகை டாப்ஸி நடித்துள்ள ராஷ்மி ராக்கெட் என்ற திரைப்படம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து தடகள போட்டிகள் வீராங்கனையாக சாதனை பெற்ற ஒரு இளம்பெண்ணின் உண்மை கதையை இயக்குனர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையை திரைப்படமாக பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்காஷ் கருணா முன்வந்துள்ளார். இந்த கதை தற்போது பாலிவுட்டில் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது.

இந்த படத்தில் கதையின் நாயகியான ராஜஸ்தான் இளம்பெண்ணாக நடிகை டாப்ஸி நடிக்க உள்ளார். இதற்காக அவர் தடகள பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மி ராக்கெட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த அறிவிப்பை சற்று முன்னர் நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இப்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஜி 5 தளத்தில் நேரடியாக ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவும் இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.