முருங்கைக்காய் சிப்ஸ் பட வீடியோ பாடல் ரிலீஸ்

Sinoj| Last Modified சனி, 8 மே 2021 (18:40 IST)

நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைகாய் சிப்ஸ். இப்படத்தின் வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

லிப்ரா புரோடெக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் ஆகியோர் தயாரிப்பில், ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இப்படத்தின் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கவுள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆன்ந்த்ராஜ்,
மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன் , யோகிபாபு உள்ளிட்டோர்
நடிக்கின்றனர்.

ஒரு புதிய இளம்ஜோடிக்கு முதலிரவு நடப்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் எதோ சொல்ல என்ற வீடியோ பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது. இப்பாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை ரவீந்தர் சந்திரசேகர் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :