1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (13:35 IST)

சூடு பிடிக்கும் பிக்பாஸ்: ஜனனி-மும்தாஜ் மோதல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியை விட சமூக வலைத்தளங்களில் வெளிவரும் அதன் புரமோ வீடியோ பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. புரமோ வீடியோவில் போட்ட காட்சி எப்போது வரும்? என்று அவர்கள் எதிர்பார்ப்பும் நிகழ்ச்சியை பார்க்கும்போது உள்ளது
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் காயத்ரியாகவே முழுமையாக மாறிவிட்ட மும்தாஜை பார்க்க முடிந்தது. தலைவர் என்றும் பாராமல் அந்த பதவிக்கு மதிப்பு கொடுக்காமல் ஜனனியை பேச விடாமல் அடக்குவது, நித்யாவிடம் வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு செல்வது, பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை ஒரு ஆளுமையுடன் நடத்துவது போன்ற காட்சிகள் அவரது நாட்டாண்மை தன்மையையும் வெளிப்படுத்துவதோடு அவருக்கு அப்படியே காயத்ரியின் குணம் இருப்பதும் தெரிய வருகிறது.
 
இந்த வாரம் எலிமினேசன் இல்லை என்பதால் மும்தாஜ் தப்பித்தார். அடுத்த வாரம் நிச்சயம் அவர் எலிமினேசன் லிஸ்ட்டிலும் வருவார், வாக்குகள் மூலம் மக்கள் அவரை வெளியேற்றவும் தயங்க மாட்டார்கள் என்பது நெட்டிசன்களின் எதிர்ப்புகளில் இருந்து தெரியவருகிறது.