1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 21 ஜூன் 2018 (15:14 IST)

கதறி அழும் மும்தாஜ் - என்ன செய்தார் செண்ட்ராயன்? (வீடியோ)

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தினமும் வெளியிட்டு வருகிறது. எனவே, புரோமோ வீடியோவில் வெளியிட்ட காட்சிகள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், குஷி படத்தில் இடம் பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ என்கிற பாடலுக்கு மும்தாஜும், செண்ட்ராயனும் நடனம் ஆடுகிறார்கள். ஒரு கட்டத்தில் மும்தாஜ் கதறி அழத் தொடங்குகிறார். உடனே, என்னடா பண்ண! நீ வெளிய போடா! என மஹத் கோபமாக கூறுகிறார். இதுகேட்டு செண்ட்ராயன் அதிர்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.
 
வீடியோவை பாருங்கள்....