செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (17:33 IST)

பண மோசடி புகார்: பிரபல நடிகைக்கு கைது வாரண்ட்

Zareen Khan
இந்தி நடிகை ஜரீன் கான் பண மோசடி தொடர்பான வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை ஐரீன் கான். இவர், சல்மான் கானுடன் இணைந்து வீர், ரெடி, ஆகிய படங்களிலும், ஹவுஸ்புல் 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில்  நான் ராஜாவாகப் போகிறேன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் துர்கா பூகையில் நடனமாட ஜரின் கானுக்கு  நடனமாட விழாக்குழுவினர் ஒப்பந்தம் செய்து, அவருக்கு பணம் கொடுத்தனர். ஆனால், கூறியபடி, ஜரினால் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டால் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஜரினுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், ஜரின் விசாணைக்கு  ஆஜராகவில்லை என கூறப்படும் நிலையில், அவருக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.