வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (11:49 IST)

பிக்பாஸ் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் "முத்த வைத்யா" - புகைப்படத்தை பாருங்க!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு செயலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவதில்லை என பிக்பாஸ் போட்டியாளர் பலரும்  மோகன் வைத்யாவை குறை கூறி வந்தனர்.


 
அதனை நிரூபிக்கும் வகையில் மதுமிதாவின் "தமிழ் பெண்" சண்டையின் போது கூட கேப்டனாக இருந்த மோகன் வைத்யா அதனை கண்டுகொள்ளாமல், நமக்கு எதற்கு வம்பு என நழுவிவிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அவர் தலைவராக இருக்க தகுதியற்றவர் என கூறிவந்தனர். 
 
கடந்த வாரம் மோகன் வைத்யா வெளியேறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் அதிரடி ஆக்ஷன் எடுத்த கமல் வனிதாவை எலிமின்ட் செய்தார். இந்நிலையில் தற்போது தான் இந்த எதாவது செய்து நிலைத்திருக்கவேண்டும் என கருதும் மோகன் வைத்யா வீட்டில் இருக்கு பெண்களை அவ்வப்போது கட்டியணைத்து முத்தம் கொடுத்து பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிடுகிறார். 
 
ரேஷ்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன் வைத்யா இறுதியில் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதனை பார்த்த அபிராமி தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி கடைசியில் இப்படி முத்தம் கொடுக்கிறீர் என கேட்க, உடனே அவருக்கும் ஒரு முத்தத்தை கொடுத்து சமாதானம் செய்தார் மோகன். 
 
இதையெல்லாம் கண்ட ரசிகர்கள் பசங்களை கூட நம்பிவிடலாம் ஆனால், இந்த மாதிரி வயசானதுங்கல தான் நம்பக்கூடாது. இவர் இனி மோகன் வைத்யா "இல்லை முத்த வைத்யா" இந்த வாரம் இவரை தூக்கி வெளியே போடுங்க என்றெல்லாம் கடுப்பாகி திட்டி வருகின்றனர்.