Lyca-வை காணவில்லை- 'விடாமுயற்சி' அப்டேட் என்னாச்சு-வைரலாகும் போஸ்டர்
விடாமுயற்சி படத்தின் டைட்டில் விட்டு 300 நாளாச்சு, படத்தோட அப்டேட் என்னாச்சு என கேள்வி எழுப்பும் ரசிகர்களின் போஸ்டர் ஒன்று வைரலாகிவருகிறது.
நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றிக்குப்பின் நடித்து வரும் படம் விடாமுயற்சி.
இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் அஜர்பைஜானில் இப்பட ஷூட்டிங் நடைபெற்றது. இதில், அஜித், திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, 2 வது கட்ட ஷூட்டிங் விரைவில் ஜார்ஜியாவில் தொடங்கும் என தகவல்வெளியானது.
லால் சலாம் படம் கலவையான விமர்சனம் பெற்றதால், அப்படத்தை தயாரித்த லைகாவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், விடாமுயற்சி படத்திற்கு தாமதம் ஆகிவருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் ஒரு போஸ்டர் இணையதத்தில் வைரலாகி வருகிறது.
அதில்,
''லைகாவை காணவில்லை; விடாமுயற்சி படத்தின் டைட்டில் விட்டு 300 நாளாச்சு, படத்தோட அப்டேட் என்னாச்சு கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் ''என்று அந்தப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.