செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (15:38 IST)

உலக சினிமா சரித்திரத்தில் இடம்பெற்ற எம் ஜி ஆர்… ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொடுத்த கௌரவம்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும், அரசியலில் முதல் அமைச்சராகவும் வலம் வந்தவர் எம் ஜி ஆர்.

தமிழ் சினிமாவில் யாராலும் மறுக்க முடியாத ஒரு முகம் என்றால் எம் ஜி ஆர் ஐ சொல்லலாம். பல போராட்டங்களுக்குப் பிறகு கதாநாயகன் ஆன எம் ஜி ஆர் , அதன் பின்னர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக இருந்தார்.

தீவிர அரசியலிலும் பங்குபெற்ற அவர், தமிழக முதலமைச்சராகவும் 11 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். அவர் இறந்து 40 ஆண்டுகள் மேலாகியுள்ள நிலையில் இப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள உலக சினிமா சாதனையாளர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து எம் ஜி ஆர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.