மெர்சல் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒருசில கலவையான விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.
இந்த படம் தமிழகத்தில் முதல் நாளில் சுமார் ரூ.24 கோடி வசூல் செய்துள்ளது, சென்னை-ரூ.1.52 கோடி, செங்கல்பட்டு-ரூ.6 கோடி, கோவை ரூ.3.75 கோடி, கேரளா ரூ.6 கோடி, கர்நாடகா ரூ.4 கோடி மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் ரூ.1.50 கோடி என்று வசூல் செய்துள்ளது
மேலும் உலக அளவில் 'மெர்சல்' திரைப்படம் முதல் நாளில் ரூ.45 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இருப்பினும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்பதால் இன்னும் அசலுக்கே ரூ.85 கோடி வரவேண்டிய நிலை உள்ளது.முதல் நாள் வசூலில் பாதிகூட இன்று வசூலாகவில்லை என்றும் இனிவரும் நாட்களிலும் வசூல் இதேபோல் இருந்தால் அசல் தேறுவதே கடினம் என்றும் கூறப்பட்டு வருகிறது.