புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (16:06 IST)

அழப்போறான் தமிழனா? ; என்னடா சொல்றீங்க?

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து உருவான மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது.


 

 
இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரி குவித்துள்ளது. படம் வெளியான 2 நாட்களில் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
ஒரு பக்கம் படம் காப்பி எனவும், மறுபக்கம் படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. அதன் விளைவாக அந்த காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.
 
இந்நிலையில், பொதுவாக அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் வெளியானால் அப்படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து தமிழகத்தின் அனைத்து மாவாட்டங்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அப்படி ஒரு இடத்தில் வைக்கப்பட்ட பேனரில் ‘ஆளாப்போறேன் தமிழன்’ என்பதற்கு பதிலாக ‘அழப்போறான் தமிழன்’ என தவறாக அச்சடித்துள்ளனர்.
 
சும்மாவே கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் இதைக்கண்டு ஏகத்திற்கும் கிண்டலடிக்கத் தொடங்கி விட்டனர்.