திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (11:05 IST)

பிக் பாஸ் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா பரணி? (வீடியோ இணைப்பு)

பிக் பாஸ் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா பரணி? (வீடியோ இணைப்பு)

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. 15 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நேற்று கஞ்சா கருப்பு வெளியேறியதுடன் இதுவரை 3 பேர் வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 12 பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.


 
 
நடிகர் கஞ்சா கருப்புக்கும், பரணிக்கும் ஏற்பட்ட பிரச்சனை அடிதடி அளவுக்கு சென்று பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதன் பின்னரே கஞ்சா கருப்பின் வெளியேற்றம் நடைபெற்றது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் தன்னையே குறிவைத்து செயல்படுவதாக பரணி கூறுகிறார்.
 
பரணியின் செயல்பாடுகள் அனைத்தும் வித்தியாசமாகவே உள்ளது. யாருமே பரணியை பற்றி நல்லவிதமாக கூறுவதில்லை. நேற்று வெளியேறிய கஞ்சா கருப்பு பரணியை பற்றி கழவி கழுவி ஊற்றினார்.
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் சக போட்டியாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் பரணி விரக்தியடைந்துள்ளதாக காட்டப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கூடிக்கூடி பரணியை பற்றி பேசுகிறார்கள். காரணம் பரணியின் செயல்பாடுகள் அப்படி உள்ளது. ஏதோ மன நலம் பாதிக்கப்பட்டவர் போல.

 
 
பிக் பாஸ் வீட்டின் கேமரா முன்பு பாரணி புலம்பி தள்ளுகிறார். இறுதியில் பரணி சுவர் ஏறி குதித்தாவது இங்கிருந்து தப்பித்து ஓடிவிடலாம் என்ற முடிவுக்கு வந்து சுவர் ஏறுகிறார். பரணி பைத்தியம் பிடித்தது போல செயல்படுகிறார்.