புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (17:57 IST)

"நண்பனின் உதவியுடன் திட்டமிட்டு சேரனை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்" லீக்கான ஆடியோ!

மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டத்தை பெற்ற மீரா மிதுன் மாடல் அழகிகளை வைத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களின் பண மோசடி செய்ததாக கொடுத்த பட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். 


 
பின்னர் பிக்பாஸில் நுழைந்த அவர் போட்டியாளர்களிடமும் , மக்களிடமும் அதிக வெறுப்பை சம்பாதித்தார். இருந்தும் அவரை மூன்று வாரங்களாக தக்கவைத்திருந்தனர். இதற்கிடையில் நடத்தப்பட்ட கிராமத்து டாஸ்க்கில் சேரன் தன்னை தகாத இடத்தில் தொட்டுவிட்டதாக கூறி அபாண்டமாக பழி சுமத்தினார். இதனால் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்து அசிங்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  
 
இந்த நிலையில் திட்டமிட்டு தன் நண்பர் ஒருவரின் உதவியுடன் தான் மீரா சேரனை அசிங்கப்படுத்தியுள்ளார் என்பது ஆதாரத்துடன் மீரா பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது , தன்னை ஜோ என்பர் பிராடு பிராடு என்று பல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளான். நீ இப்போ எனக்கு சப்போர்ட் பண்ணுறமாதிரி நான் சொல்லுறதை செய், "சேரன் என் பின்னாடி நின்னு என்னை கட்டியணைத்து தள்ளுற மாதிரி தான் வீடியோவில் இருக்கு. அவர் முன்னாடி கை வைத்து என்ன பண்ணாருன்னு யாருக்கும் தெரியாது. ஒரு சாதாரண பொண்ணுக்கு நீதி கிடையாதா? இதே ஒரு டைரக்டர் பண்ணினா சரியா என்று முழுக்க முழுக்க என்னக்கு சப்போர்ட் பண்ணி எழுது.  நாளை மாலை வரை நேரம் இருக்கிறது.  இப்போவே எல்லாரும் எவிக்ட்னு போட்டுட்டாங்க மச்சி வேலை செய்யத் தொடங்குங்கள் ”என்று மீரா சொல்கிறாள். 


 
ஜூலை 27 ஆம் தேதி மீராவின் வெளியேற்றத்தின் ஒளிபரப்பிற்கு முந்தைய நாளில் இந்த ஆடியோ விவகாரம் நடந்ததாகத் தெரிகிறது. தற்போது இந்த ஆடியோ இணையத்தில் லீக்காகியுள்ளது.   ஆடியோவை கேட்ட நெட்டிசன்ஸ்  மீரா எவ்வளவு கீழ்த்தரமான வேலையை செய்திருக்கிறாள் பாருங்கள் என்று கூறி அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். 

மீரா மிதுன் தற்போது மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகும் "அக்னி சிறகுகள்" படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் "நம்ம வீட்டுப் பிள்ளை" படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.