திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (18:52 IST)

மாஸ்டர் விஜய்யுடன் மோதும் விஜய்சேதுபதி - வில்லத்தனமான வீடியோ இணையத்தில் லீக்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷிமோகா படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. 
 
இதற்கிடையில் படத்தை குறித்த குறித்த அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி ரசிகரகளை மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்க வைத்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதி பிறந்தநாளான ஜனவரி 16-ம் தேதி வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி விஜய்யுடன் மோதும் வில்லத்தனமான ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி ரசிகர்களை ஈர்த்து வந்தாலும் படக்குழுவுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.