ஜனவரி- 13 ஆம் தேதி விஜய்யின்’’ மாஸ்டர்’’ ரிலீஸ்... எங்கு தெரியுமா????
விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் விஜய்யின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் வரும் வரும் 14 ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வரவுள்ளநிலையில், தற்போது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
வரும் 13 ஆம் தேதி கேரளாவில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகிறது.
இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் கேரளா விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.