நீண்ட நாள் காதலியை திருமணம் செய்த ‘மாஸ்டர்’ நடிகர்!
நீண்ட நாள் காதலியை திருமணம் செய்த மாஸ்டர் நடிகர்!
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த குரு என்பவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் மாஸ்டர். கடந்த பொங்கல் தினத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த நடிகர்களில் ஒருவர் கலாட்டா குரு. யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற குரு, திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் அடுத்து வரும் நிலையில் அவருக்கு மாஸ்டர் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இவர் தனது நீண்ட நாள் காதலியான கற்பகம் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் தனது திருமணம் குறித்தும் திருமண புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது