1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (08:47 IST)

வெளிநாட்டில் நடந்த மாஸ்டர் சக்ஸஸ் பார்ட்டி – வெளியான புகைப்படம்!

மாஸ்டர் படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை வெளிநாட்டில் நடத்தி மகிழ்ந்துள்ளனர் படக்குழுவினர்.

மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் இணைத்தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜகதீஷ் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவரையும் துபாய்க்கு அழைத்துச் சென்று அங்கு சக்ஸஸ் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவர் மட்டும் கலந்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.