1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2017 (13:31 IST)

காதலரை திருமணம் செய்த நடிகை ரியா சென்!

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் ரியா சென். ஹிந்தி, பெங்காலி என இரு மொழிகளிலும் பல படங்கள் நடித்திருக்கிறார். 36 வயதான நிலையில் இவர் தனது காதலரான ஷிவம் திவாரியை  புனேவில் ஆகஸ்ட் 18ம் தேதி நேற்று திருமணம் செய்து கொண்டார்.

 
நடிகை ரியா சென் கடந்த சில ஆண்டுகளாக சிவம் திவாரி என்பவரை காதலித்து வந்தார். தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். புனேயில் பெங்காலி முறைப்படி எளிமையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
நடிகை ரியா சென் பிரபல பாலிவுட் நடிகை மூன் மூன் சென்னின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.