ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (07:11 IST)

இயக்குனர் பாலாவோடு எதுவும் பேசவில்லை… இயக்குனர் மாரி செல்வராஜ்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்துக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து ப்ரமோஷன் செய்தனர். அதில் இயக்குனர் பாலா படம் பார்த்தபின்னர், அழுதபடியே வெளியே வந்து இயக்குனர் மாரி செல்வராஜை கட்டியணைத்து அழுதது வீடியோவாக வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜிடம் இயக்குனர் பாலா உங்களிடம் படம் பார்த்த பின்னர் என்ன சொன்னார் என்று கேட்கப்பட்டது. அதற்கு மாரி செல்வராஜ் “இயக்குனர் பாலா சாரும் நானும் அந்த தருணத்தில் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.” எனக் கூறியுள்ளார்.