மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தின் புதிய அப்டேட்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வாழை படத்தின் புதிய அப்டேட் போது வந்துள்ளது.
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதன் பிறகு அவர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் கலையரசன் உள்பட பலர் நடித்து வரும் வாழை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதோடு தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் கட்ட படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தனது நன்றி என தெரிவித்துள்ளார்.
Edited by Siva