1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (12:56 IST)

இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்க மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழு முடிவு.. எத்தனை லட்சம்?

ilaiyaraja
இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்க  மஞ்சுமெல் பாய்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான  மஞ்சுமெல் பாய்ஸ்  என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலி என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. 
 
இந்த பாடல் காரணமாகத்தான் இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதாக கூறப்பட்ட நிலையில் இந்த பாடலை தன்னுடைய அனுமதி இன்றி  மஞ்சுமெல் பாய்ஸ்  படக்குழுவினர் பயன்படுத்தியதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 
 
இதற்கு பதில் அனுப்பியிருந்த  மஞ்சுமெல் பாய்ஸ்  தயாரிப்பு நிறுவனம் இந்த பாடலை உரிமை பெற்ற நிறுவனத்திடம் அனுமதி வாங்கியிருந்ததாக கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கும்,  மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஒரு சமரச ஒப்பந்தம் ஆகியுள்ளது.
 
இதன்படி  மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இளையராஜாவுக்கு  மஞ்சுமெல் பாய்ஸ்  தயாரிப்பு நிறுவனம் ரூபாய் 60 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva