புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (08:44 IST)

மணிரத்னம் & எஸ் எஸ் ராஜமௌலி வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜின் புதிய பாடல்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள லெஜண்ட் படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

வேல்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘மொசலோ மொசலு’ என்ற பாடல் இணையத்தில் வெளியானது. இந்த பாடலை முன்னணி இயக்குனர்களான மணிரத்னம் மற்றும் எஸ் எஸ் ராஜமௌலி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டனர். இந்த பாடல் இதுவரை 8.5 லட்சம் பேரால் இணையத்தில் பார்க்கப்பட்டுள்ளது.