1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (13:48 IST)

கெஞ்சி கூத்தாடிய மணிமேகலை - ஒருவழியா ஆங்கர் வாய்ப்பு கொடுத்த தொலைக்காட்சி!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதில் தனி இடத்தையே பிடித்துவிட்டார். ஆனால், விஜய் டிவியில் ஆங்கராக வேண்டும் என்பது தான் அவரது ஆசை. அதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சொல்லி புலம்பியிருக்கிறார். 
 
இந்நிலையில் ஒருவழியாக மணிமேகலைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது விஜய் டிவி. ஆம், விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சிங்கள் பொண்ணுங்க’ நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து ஆங்கராக ஜொலிக்கப்போகிறார் மணிமகேலை. அதன் ப்ரோமோ வீடியோ விரைவில் எதிர்பார்க்கலாம்.