வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2024 (15:42 IST)

பிரச்சனைகள் பற்றி தெரிந்தும் மோகன்லால் அமைதியாக இருந்தார்.. பிரித்விராஜின் அம்மா குற்றச்சாட்டு!

மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தற்போதைய நிலையில் மிகவும் ஆரோக்யமாக செல்லும் மாநிலமாக கேரளா இருந்த நிலையில் இந்த புகார் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல பிரபலங்கள் மீது அடுக்கடுக்காகப் புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் மலையாள சினிமாவின் மூத்த நடிகரும், நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித் ஆகியோரும் தாயாருமான  மல்லிகா சுகுமாறன் மோகன்லால் குறித்து குற்றச்சாட்டை வைத்து வருகிறார். அதில் “மலையாள சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து மலையாள சினிமா நடிகர்கள் சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு நன்கு தெரியும். ஆனால் அதையெல்லாம் தெரிந்துகொண்டும் மோகன்லால் அமைதியாக இருந்தார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.