செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (06:59 IST)

ரஜினிகாந்துக்கு அடுத்து அதிக ரசிகர்கள் இருப்பது சமந்தாவுக்குதான்… இயக்குனர் வைத்த ஐஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில ஆண்டுகளாக மையோசிட்டீஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அதே போல அவரது குடும்ப வாழ்க்கையும் கடந்த சில ஆண்டுகளில் பிரச்சனைகளில் சிக்கியது. அவரது காதல் கணவரான நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இப்போது உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் கைவசம் இப்போது சிட்டாடல் வெப் தொடர் மட்டுமே உள்ளது. இந்நிலையில் அவர் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஜிக்ரா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய இயக்குனர் திரிவிக்ரம் “தென்னிந்தியாவில் ரஜினிகாந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்டவர் சமந்தாதான். நான் இதை முழு மனதுடன் சொல்கிறேன். நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுக்கான கதாபாத்திரத்தை உருவாக்க நான் தயாராக இருக்கிறேன். ’ எனப் பேசியுள்ளார்.  இதனால் திரிவிக்ரம்மின் அடுத்த படத்தில் சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.