ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 ஜூன் 2023 (12:30 IST)

லேடி கமல்ஹாசனாக மாளவிகா மோகனன்… தங்கலான் படத்தின் மேக்கப் பற்றி பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலில் வேலை செய்த தமிழர்களை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன.

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பழங்குடியினப் பெண்ணாக நடிக்கும் மாளவிகா மோகனன் படத்துக்காக மேக்கப் போடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

மேலும் அதோடு தங்கலான் படத்தின் மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் உள்ளிட்ட விஷயங்களுக்கே தினமும் ஐந்து மணிநேரம் தேவைப்படுவதாகவும், அதற்காக அசையாமல் ஒரே இடத்தில் இருப்பது சவாலான காரியமாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.