அதிகரித்த கொரோனா; ஓடிடிக்கு செல்கிறாரா மகான்?
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் பிரபலமான நடிகரான விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மகான் படத்தை ஓடிடியில் வெளியிடுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படமான ஜகமே தந்திரமும் ஓடிடியிலேயே வெளியானது குறிப்பிடத்தக்கது.