புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (11:13 IST)

வட்டி வசூலிக்கும் ஓடிடி நிறுவனங்கள் – இயக்குனர் சீனுராமசாமி கண்டனம்!

திரையரங்குகளில் படங்கள் வெளியாக தாமதமானால் ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதலாக திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதே வழக்கமாக இருந்து வந்த நிலையில் சமீபத்திய கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடு காரணங்களால் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவது வாடிக்கையாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாவது தொடர்கிறது. இதற்காக பட தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் அட்வான்ஸ் தருகின்றன. ஆனால் சில காரணங்களால் பட வெளியீடு தள்ளி போனால் கொடுத்த அட்வான்ஸிற்கு ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தான் ஓடிடி நிறுவனங்களுக்கும் பெருமை என அவர் தெரிவித்துள்ளார்.