வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (15:32 IST)

ச்சீ..மனுஷங்களா அவங்களா...? உண்மையை மூடி மறைத்துவிட்டார்கள் -மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தையும், வீட்டிற்குள் நடந்த சம்பவங்களை பற்றியும் முதன் முறையாக மதுமிதா தெரிவித்துள்ளார். 


 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதாவுக்கும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை இருந்துவந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்கில் பரவலாக பேசப்பட்டது.  
 
ஆனால், மதுமிதா வெளியேற்றத்திற்கு அது இல்லை காரணம் என சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தததையடுத்து தற்போது முதன்முறையாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியயே வந்துள்ள மதுமிதா முதன்முறையாக அங்கு நடந்ததை பற்றி தெரிவித்துள்ளார். அதாவது,  "நான் தைரியமான பெண் என்பது உங்களுக்கு தெரியும், என் தைரியம் எந்த அளவிற்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பேன்.
 
நான் என் கருத்தை அங்கு வெளிப்படுத்தினேன், என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு இழிவாக பேசி என்னை முட்டாள் என்றார்கள். கடைசியில் யார் முட்டாள் என்று தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.
 
ஆனால் நிகழ்ச்சியில் இதெல்லாம் ஒளிபரப்பப்படவில்லை. நடந்தவற்றை மறைத்துவிட்டு மக்களுக்கு மதுவின் தவறான பிம்பத்தை வெளிகாட்டிவிட்டார்கள்.