புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (19:06 IST)

என்ன ஆனது மேடிக்கு?: ரசிகர்கள் கவலை

மாதவன் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை கண்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருபவர் மாதவன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது ‘ப்ரீத்’ என்ற வெப்சீரியலில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் ’விண்ணை தாண்டி வருவாயா-2’ படத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்நிலையில் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தோள் பட்டையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வருவதாகவும், வலது கை இருப்பதையே உணர முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட மாதவன் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.