வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (15:20 IST)

மும்பையில் 17 கோடியில் சொகுசு வீடு வாங்கிய மாதவன்!

தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் மாதவன். அடுத்தடுத்து அவர் நடித்த லேசா லேசா, மின்னலே மற்றும் ரன் ஆகிய திரைப்படங்கள் அவரை சாக்லேட் ஹீரோவாக்கியது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தன் மார்க்கெட்டை இழக்க, அதன் பின்னர் இறுதிச் சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களின் மூலம் கம்பேக் கொடுத்தார்

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அவர் கங்கனாவோடு இணைந்து ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சசிகாந்த் இயக்கும் டெஸ்ட் மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கும் புதிய படம் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களுக்காக மும்பையில் வசித்து வரும் அவர் இப்போது அங்கு 17 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய வீட்டை அடுக்குமாடிக் குடியிருப்பில் வாங்கியுள்ளார்.