செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (12:39 IST)

மாநாடு மறுபடியும் ட்ராப்பா? கடுப்பாகிய சுரேஷ் காமாட்சி அதிரடி அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. மேலும், படத்தை குறித்து நிறைய வதந்திகள் வெளியாகி படக்குழுவினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

சிம்பு படப்பிடிப்பிற்கு வர ஆடம் பிடிக்கிறார், படம் பாதியில் ட்ராப் ஆகிவிட்டது என இப்படி தொடர்ந்து பல வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்ப்போது மீண்டும்  மாநாடு திரைப்படம் ட்ராப் ஆனதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட அது தீயாக பரவியது. இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற படத்தின் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,

"இனி இதுபோன்ற தவறான செய்திகள் வெளியானால் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தை நான் சும்மா விடமாட்டேன் என எச்சரித்துள்ளார். மேலும், ஊடகத்துறையின் மீது எப்போதும் மிகுந்த மரியாதையை வைத்திருப்பவன் நான். ஆனால், அடிக்கடி இப்படி படக்குழுவினரை விசாரிக்கலாமே அவர்களாகவே எப்படி பொய்யான செய்தி  வெளியிடலாம்? மாநாடு படம் ஒருபோதும் டிராப் ஆகாது. எனவே, இது போன்ற வேலையை இத்துடன் நிறுத்துங்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.