வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (18:50 IST)

யூடியூபில் ட்ரெண்ட் அடித்த "லவ் ஸ்டோரி" ட்ரைலர்!

பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இதை தொடர்ந்து இவர் தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
 
தொடர்ந்து மாரி -2 , NGK உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று யூடியூபில் வெளியாகி 9 ட்ரெண்டிங் இடத்தை பிடித்துள்ளது.