1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (18:14 IST)

லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு.. ஃபைட் கிளப் டீசர் ரிலீஸ்.. !

லோகேஷ் கனகராஜ் இதுவரை ஐந்து திரைப்படங்கள் இயக்கியுள்ள நிலையில் அவருடைய முதல் தயாரிப்பு திரைப்படமான ஃபைட் கிளப் என்ற படத்தின் டிசர் சற்றுமுன் வெளியானது.

முழுக்க முழுக்க விஜயகுமாரின் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருக்கும் இந்த டீசர் பார்க்கும்போதே படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாஸ் ரஹ்மத்  இயக்கத்தில் கோவிந்த வசந்தா இசையில் உருவாகிய இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ஜிஸ்குவாட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்

மேலும் இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மொத்தத்தில் இந்த டீசர் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran