ஒரே வெட்டு.. வில்லன் தலையை கையோடு கொண்டு செல்லும் விஷால்: டைட்டில் டீசர்..!
வில்லன் தலையை ஒரே வெட்டாக வெட்டி அந்த தலையை கையோடு விஷால் கொண்டு செல்லும் பர்ஸ்ட் லுக் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ரத்னம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த டைட்டில் டீசரில் விஷால் ஆவேசமாக ஒரு பெரிய அரிவாளை எடுத்துக் கொண்டு வந்து வில்லன் தலையை துண்டாக வெட்டி அந்த தலையை தன் கையோடு கொண்டு செல்லும் காட்சி உள்ள இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இந்த டைட்டில் டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.