புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (15:12 IST)

பகாசூரன் பட ''சிவ சிவாயம்'' பாடலைக் கேட்டு ரசியுங்கள்-- பிரபல நடிகர் வீடியோ

bagasuran
மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் பகாசுரன் படத்தின் முதல் சிங்கில் குறித்து பிரபல நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனர்  மோகன் ஜி சத்ரியன். இவர் பழைய வண்ணாரப்பேட்டை,  திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதில்,  திரவுபதி படம்  நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி – சவுந்தர்யா  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்தது. இதனால், இவரது அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று அஜித்61 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியானதை அடுத்து, மோகன் ஜி,தன் டுவிட்டர் பக்கத்தில், அஜித்61 பட தயாரிப்பாளர் போனிகபூரை டேக் செய்து, எப்போது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் செய்வீர்கள் என்று சொல்லுங்கள் என் பகாசுரன் முதல் சிங்கிலையும் அப்போது ரிலீஸ் செய்கிறேன்..ரசிகர்களுக்கு டபுள் தமாகாவாக  இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பகாசூடன் படத்தின் நடித்துள்ள  நடிகர் நட்டி, தற்போது, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளளார், அதில், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன்  நடிப்பில் உருவாகியுள்ள  பகாசுரன் படத்தின் முதல் சிங்கில் சிவ சிவாயம் பாடலின்  லிரிக் வீடியோ  இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாகும்..அனைவரும் கேட்டு ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்  என நடிகர் நட்டி வீடியோவில் பேசியுள்ளார். இது வைரலாகி வருகிறது.

மேலும், கூல் சுரேஷ்  ஒரு வீடியோ வெளியிட்டு,அதில், மோகன் ஜி இயக்கத்தில், பகாசூரன் படத்தில் இடம்பெற்றுள்ள சிவ சிவாயம் என்ற  முதல் சிங்கில்  இன்று மாலை வெளியாகவுள்ளது, பாடல் அருமையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.