அமாவாசை நாளில் ரஜினி சொகுசு சவாரி: #LionInLamborghini டிரெண்டு!!
சமூக வலைத்தளமான டிவிட்டரில் ரஜினி ரசிகர்கள் #LionInLamborghini என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
கொரோனா காரணமாக சினிமாப் படப்பிடிப்புகள் சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லா நடிகர்களும் இந்தக் கொரொனா காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைவரையும் போலவே வீட்டில் முடங்கி இருந்த ரஜினி, நேற்று சொகுசுக் காரான லாம்போர்கினியில் டிரைவர் இல்லாமல் தானே வெளியில் சென்று வந்துள்ளார். இந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஒவ்வொரு ஆடி அமாவசை தினத்தன்று தனது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பழக்கத்தை வைத்துள்ளவர் ரஜினிகாந்த். எனவே நேற்று ஆடி அமாவாசை என்பதால் திதி கொடுக்க வெளியே சென்றுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.
அதோடு, சமூக வலைத்தளமான டிவிட்டரில் ரஜினி ரசிகர்கள் #LionInLamborghini என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.