வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (15:20 IST)

6 மாதத்தில் இவ்வளவுதான் முடிந்துள்ளதா?.. LIK ஷூட்டிங்கில் அட்ராசிட்டி பண்ணும் விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. ஆனால் சில காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சண்டிகாரில் தொடங்கி நடந்தது. இந்த படத்துக்கு LIK (Love insurance company) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீமா” வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்குதான் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி ஆறு மாதங்கள் நடந்துள்ள போதும் இதுவரை 50 சதவீதக் காட்சிக்ளைதான் படமாக்கி முடித்துள்ளாராம் விக்னேஷ் சிவன். இதனால் தயாரிப்பு நிறுவனம் அவர் மேல் வருத்தத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.