திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (09:47 IST)

பிரதீப்பின் டிராகன் படத்தில் இணைந்த இரண்டு யுடியூப் பிரபலங்கள்!

கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்போது இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கடாயு லோஹர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் யுடியூப் பிரபலங்களான VJ சித்து மற்றும் VJ ஹர்ஷத் கான் ஆகியோர் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கல் சித்தி Vlogs யுடியூப் சேனலின் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.