புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (22:37 IST)

இளைஞர்களுக்கான வாழ்க்கைப் பாடம் – விஜய்யின் தந்தை முடிவு

தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், ஜெய், உள்ளிட்ட நடிகர்களை வைத்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர்  எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதால ஒரு யூடியூப் சேனல் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80- 90 களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.சேர் சந்திரசேகர். இவர் விஜய்யின் தந்தை ஆவார்.

கடந்த ஆண்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்குவதாக தகவல் வெளியானதை அடுத்து, இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அரசியல் குறித்து எதுவும் பேசாமல் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் தன் சினிமா வாழ்வில் இதுவரை 70 படங்கள் இயக்கியுள்ள அனுபவங்களையும் அதன் வெற்றி, தோல்விகள் பற்றியும் யூடியூப் சேனல் தொடங்கி அதன் வழி கூறி தெரிவிக்கவுள்ளார். இது இளைஞர்களுக்கான வாழ்க்கைப் பாடமாக இருக்கும் எனவும் இதில் உண்மைகளே இடம் பெரும் எனத் தெரிவித்துள்ளார்.