திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:08 IST)

தனுஷ் கட்டும் வீடு… ரஜினியின் அன்பளிப்பா?

பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் போயஸ் கார்டனில் வாங்கியுள்ள இடத்திற்கு பூமி பூஜை செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லம், நடிகர் ரஜினிகாந்த் இல்லம் என அரசியல் வட்டாரத்தின் பிஸியான இடமாக இருப்பது போயஸ் கார்டன். தற்போது தனது மாமனார் ரஜினி வீடு உள்ள போயஸ் கார்டனிலேயே நடிகர் தனுஷ் இடம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த இடத்தில் பிரம்மாண்டமாக வீடு கட்ட சில மாதங்களுக்கு முன்னர் பூமி பூஜை நடந்ததது.

இப்போது வீடு கட்டும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் அந்த வீட்டையே ரஜினிதான் தனுஷுக்கு வாங்கித் தருவதாக சொல்லப்படுகிறது. தான் தங்கியிருக்கும் வீட்டை இளைய மகளுக்கு கொடுத்துவிட்ட ரஜினி, அதே போல ஒரு வீட்டை மூத்த மகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த இடத்தை வாங்கி வீட்டைக் கட்டிக் கொடுக்கிறாராம்.