1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (08:20 IST)

’நான் ரெடி’ பாடல் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது என ராஜேஸ்வரி டுவிட்..!

விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற  நா ரெடி என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலில் பெண்களை கொச்சைப்படுத்தும் வார்த்தை இருப்பதாக கூறிய ராஜேஸ்வரி பிரியா இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது நீதிமன்றம் இந்த பாடலில் உள்ள சில வரிகளை மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக ராஜேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி  வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. விஜய், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் எனது புகாரை ஏற்று  நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும்….
 
உண்மை பணத்தைவிட வலிமையானது.
 
Edited by Siva