வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (16:41 IST)

1300 பேர் ஆடுனோம்.. சம்பளமே தரல! – லியோ பட நடன கலைஞர்கள் புகார்!

Leo
லியோ படத்தில் நடனமாடியதற்கு சம்பளமே தரவில்லை என அப்படத்தில் பணிபுரிந்த நடன கலைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதியன்று வெளியாக உள்ளது. ஷூட்டிங் தொடங்கியது முதலே இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான பட ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஆனால் இவ்வளவு எதிர்பார்ப்பு நிறைந்த ஒரு படத்திற்கு ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி கூட நடத்தப்படவில்லை. மேலும் படத்தின் முதல் காட்சியை அதிகாலையில் வெளியிடுவதில் சிக்கல், ப்ரீ ரிலீஸ் ஈவண்டிற்கு அனுமதி மறுப்பு என படம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

தற்போது லியோ படத்திற்கு புதிதாக ஒரு சிக்கலும் முளைத்துள்ளது. லியோ படத்தின் “நான் ரெடிதான் வரவா” படம் மிகவும் வைரலாகியுள்ளது. இந்த பாடலில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆடியிருந்த நிலையில் அவர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

6 நாட்கள் படமாக்கப்பட்ட அந்த பாடல் காட்சியில் நடித்த 1300 நடன கலைஞர்களுக்கும் ஒரு நாள் சம்பளம் கூட வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர்கள், தங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்குள் சம்பளத்தை தராவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K