வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:58 IST)

லியோ படத்தின் பிரிமியர் காட்சிகள் நடக்காதா? திடீரென்று பரவிய தகவல்!

சில தினங்களுக்கு முன்னர் வெளியான விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஏற்கனவே படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இப்போது அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இன்னும் 9 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள தமிழ்நாட்டில் படத்துக்கு சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் முதல்நாளே இந்த படத்தின் பிரிமியர் காட்சிகள் இரண்டை திரையிட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் திட்டமிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த பிரிமியர் காட்சிகள் நடப்பது சந்தேகம் என்ற சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.