அதிகரிக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள்.. ‘ஜெயிலர்’ சாதனையை பின்னுக்கு தள்ளுமா ‘லியோ’?
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை விட இரு மடங்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
நடுநிலை விமர்சகர்கள் கூட இந்த படத்தின் இரண்டாம் பாதியை படுமோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். முதல் பாதி ஓரளவுக்கு நன்றாக உள்ளது என்றும் இரண்டாம் பாதி திரைக்கதை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் சண்டைக் காட்சிகள் மிக அதிகமாக இருப்பதால் சலிப்பு ஏற்படுவதாகவும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் சரியில்லை என்றும் இது விஜய்க்கு ஏற்ற கதையே இல்லை என்றும் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ;ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில் அந்த வசூலை லியோ திரைப்படம் பின்னுக்கு தள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Siva