ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (06:54 IST)

“உச்ச நட்சத்திரங்கள் யாரும் த்ரிஷாவுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள்…” – இயக்குனர் லெனின் பாரதி ஆவேசம்!

2017ல் கூவத்தூரில் அதிமுக எம்.எ.ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது அங்கு நடிகைகளோடு அவர்கள் உல்லாசமாக இருந்ததாக கூறி, நடிகை த்ரிஷாவின் பெயரையும் குறிப்பிட்டு சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் சமூகவலைதளங்களில் திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஏ வி ராஜுவை கண்டித்தும் குரல்கள் எழுந்தன. சினிமா துறை சார்ந்த சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் த்ரிஷாவோடு இணைந்து நடித்த ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என யாருமே குரல் கொடுக்கவில்லை.

இதுபற்றி மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி மங்கை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அதில் “த்ரிஷாவுக்காக நடிகர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை என சொல்கிறார்கள். அவர்கள் எப்படி கொடுப்பார்கள். அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடல்களை மையமாக வைத்து முன்னேறி வந்தவர்கள். நான் சிறு வயதில் இருக்கும் போது ரஜினி கமல் படங்களில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படத்தைதான் போஸ்டர்களில் பெரிதாக போடுவார்கள்.

அவர்கள் அனைவருமே பெண்ணை வெறும் உடலாக மட்டும் பாருங்கள் என  என போதிக்கும் சினிமாவைதான் எடுப்பவர்கள். அப்படி படம் எடுப்பவர்கள் பெண் விடுதலை குறித்து பேசமாட்டார்கள். அப்படியே பேசினாலும் அதில் சுயநலம் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.