திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (09:52 IST)

சோசியல் மீடியாவிலும் கலக்க வரும் “லெஜெண்ட்” சரவணா! - போஸ்டர் அப்டேட்!

Legend
சினிமாவில் “லெஜெண்ட்” படத்தின் மூலம் நுழைந்துள்ள லெஜெண்ட் சரவணா அடுத்ததாக ரசிகர்களோடு நேரடி தொடர்பில் இருக்க சமூக வலைதளத்திற்கும் வருகிறாராம்.
தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணா. முதலில் தனது கடை விளம்பர படங்களில் நடித்த லெஜெண்ட் சரவணா தற்போது திரைப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.
 
ஜேடி - ஜெரி இயக்கியுள்ள “லெஜெண்ட்” படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகிறது.
 
இந்நிலையில் படம் வெளியாகும் முன்பாக தனக்கென சமூக வலைதள கணக்குகளையும் உருவாக்க இருக்கிறாராம் லெஜெண்ட் சரவணா. தனது ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதற்காக விரைவில் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க உள்ளதாக, அதுகுறித்த போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.